Friday, 3 January 2014

நிலையின்மை

இந்த உலகமே நிலையில்லாதது . சுழன்று கொண்டே இருக்கும். நிலையான நிலை தேடி அலையும்  மனிதன் நிலைகொலைந்து தொலைந்து  போவான்,


இந்த வாழ்விருக்கு பேராசை பேய் பிடித்து நாராசமாய் போகும் மனிதன் உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தவன் ஆள  வேண்டும் மக்களை. அதிகாரங்கள் ஒப்படைக்க வேண்டும் அவன் கால் அடியில். நிலையின்மையை  உணர்ந்து நிலையான நீதி வழங்கி நிடிப்பவனே உயர் குடிமகன். உண்மையான கோ .


நிலை தவறினாலும் நீதி தவறாத கோ கிடைக்க புண்ணியம் செய்தாயோ எங்கள் பூமித்தாயே, மும்மாரி பெய்து வாழுத்திய வருண கருணா தயாளனே.

யார் கண் பட்டதோ ? நாடாள சண்டாள  பாவிகள். இருந்த கருப்பையை  கூட விற்க்கும் அறுவறுக்கப்படும் மண்புழுக்கள் நொண்டி நாறடிக்கும் இந்த பழம் பெருமை வாயுந்த தமிழ் மண்.


சான்றாய் உரைக்கும் உலகத்தின் நிலையின்மையை

உலகம் உணர வை உன் பெருமையை .



இந்த உலகம், தற்போதைய சூழ்நிலையில் உன் உயர்வுகளே கண்டுகொள்வதில்லை  . உன் குற்றத்தை பறைசாற்ற இடம் பொருள் ஏவள் பார்த்து கொண்டுள்ளது.  விடாமல்  தோல்வி கண்டவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல, வெற்றி மட்டுமே சுவைத்தவர்கள் எல்லாம் வீரர்கள் அல்ல. வெற்றியும் தோல்வியும்  மதிப்பெண்களே  அவை முடிவுகள் அல்ல. முடிவுகள் எல்லாம் ஒன்று உலக நன்மைக்கு இல்லை உந்தன் வெற்றிக்கு. பாடுபடு, உழை ஓய்வின்றி . விழுவது நாம் ஆயினும் விதையாய் முழைத்து வெற்றிக்கு வழிவகுப்போம்.

வியர்வை வழியே விதி  வழியை நம்பாதே.

முகப்பு


ஏழுலகம் வாழ ஏழு  சொல்லில் எடுத்துரைத்தான்  வள்ளுவன்  அவன் வழி  கொண்டு திராவிட தமிழில் உணர்வு  தீட்டும் ஒரு முயற்சி.




இப்படிக்கு
தமிழ்ப்பற்று  கொண்ட ஒரு தமிழன்